Innovative
Tuesday, 10 June 2025
Saturday, 24 March 2018
FLASH NEWS : "சிறுதுளி" சகோதரர் "ஆசிரியர் திரு.ஜெயா வெங்கட்" இறைவனடி சேர்ந்தார்
"மகிழ்வித்து மகிழ்" சகோதரர் திரு.ஜெயா வெங்கட் இதய அடைப்பு காரணமாக இன்று இறைவனடி சேர்த்தார்.
தனது பள்ளி மட்டுமல்லாமல் தமிழகப் பள்ளிக் குழந்தைகளின் முகங்களில் மகிழ்ச்சியைப் பார்ப்பதையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் நண்பர் Jaya Venkat .
இன்று குழந்தைகளோடு சென்னையைச் சுற்றி மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே மரணத்தைத் தழுவிய செய்தி மனதைப் பெருங்கனமாக ஆக்கியிருக்கிறது.
"மகிழ்வித்து மகிழ்"என உயிர்மூச்சின் இறுதிவரை தம் மாணவர்களை மகிழ்விக்க சென்னைக்கு அழைத்த சென்று மகிழ்ந்திருக்கும்போதே
சிறுதுளி Jaya Venkat நம்மை விட்டுப் பிரிந்தார்....
"மகிழ்வித்து மகிழ்"என உயிர்மூச்சின் இறுதிவரை தம் மாணவர்களை மகிழ்விக்க சென்னைக்கு அழைத்த சென்று மகிழ்ந்திருக்கும்போதே
சிறுதுளி Jaya Venkat நம்மை விட்டுப் பிரிந்தார்....
அழுவதைத் தவிர வேறென்ன செய்வது!
தமிழகத்தின் பல்வேறு ஊரிலுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளின் அன்பும் கண்ணீரும்!
ரகுபதி இநிஆ
ஊ ஒ ந நி பள்ளி திம்மசந்திரம்
வேப்பனப்பள்ளி ஒன்றியம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
Monday, 29 January 2018
BASIC MATHEMATICS PROGRAMME MODULE FOR PRIMARY STUDENTS
Basic mathematics work book for up- level classes...
Click here to download...
https://drive.google.com/file/d/1C84n92t0gzwJatnBAaZo4n0oZ1N4mQ9O/view?usp=sharing
Click here to download...
https://drive.google.com/file/d/1C84n92t0gzwJatnBAaZo4n0oZ1N4mQ9O/view?usp=sharing
Sunday, 24 September 2017
ELEMENTARY ENGLISH GRAMMAR BOOK 1 - software
மிக எளிமையாக, ஆங்கில இலக்கணத்தை குரல் ஓசை மற்றும் படங்களுடன் விவரித்துள்ளனர். 25 பகுதிகளை கொண்டுள்ளது.
கூடவே பயிற்சிகளும் மேற்கொள்ள முடிகிறது.
கனிணி மற்றும் “ ஸ்மாா்ட் போா்டில்” பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருள் வெளியீட்டாளர்களின் முகவரியை நான் அறியேன்.
ஆசிாிய நண்பா் வாயிலாக கிடைக்கப்பெற்ற மிகச் சிறப்பான இந்த மென்பொருள் மாணவா் நலனுக்காக எவ்வித இலாப நோக்கமும் இன்றி இவ்வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன்.
85 mp அளவுடைய WIN ZIP FILE ஐ பதிவிறக்கம் செய்ய.....
ரகுபதி இநிஆ
வேப்பனப்பள்ளி ஒன்றியம்
கிருஷ்ணகிரி
கணினி வழி கற்பித்தல் மென்பொருள் - தமிழ்
தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்க உதவும் எளிய
துணைக் கருவி.
உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், க,ங, ச முதல் ன வரிசை வரைஉள்ள எழுத்துக்களை கணினி வழியாக எளிமையாக கற்பிக்க உதவும் மிக அற்புதமான துணைக்கருவியாகும்.
WIN ZIP FILE ஆக உள்ளதை டவுன்லோட் செய்யவும். அதன் உள்ளே
SwiffPlayerSetup172 என்ற சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
இப்பொழுது மீதம் உள்ள அனைத்து போல்டர்களையும் திறந்து கற்பிக்கலாம்.
இதன் சிறப்பு '' ஸ்மார்ட் போர்டு '' கொண்டுள்ளவர்களுக்கு மிகவும் பயனாக விளங்கும்.
சாதரணமாக கணினியிலும் கற்பிக்கலாம்.
உருவாக்கியவர்கள் திருவாளர்கள்
நன்றி
பெ. சந்திரசேகரன் ஆசிரியர்
அந்தியுர் ஒன்றியம்
ஈரோடு
ரா. நித்தியானந்தன் ஆசிரியர்
பவானி ஒன்றியம்
ஈரோடு
மாணவர்கள் பயன்பாட்டுக்காக இவ்வலை தளத்தில் பதிவேற்றிஉள்ளேன்.
ரகுபதி இநிஆ
திம்மசந்திரம்
பதிவிறக்கம் செய்ய
https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFQ0lkS3hwUUlmSFU/view?usp=sharing
Wednesday, 9 August 2017
இன்று ஒரு தகவல் 30 - MP3 தென்கச்சி கோ. சுவாமிநாதன்
மாியாதைக்குாிய திரு. தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவாா். இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார்.அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் இந்த நாள் இனிய நாள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தாா்.
அவாின் இக்கதைகள் மாணவர்களுக்கு நல்ல சிந்தனைகளை உருவாக்கிட உதவியாக
30 சிறு கதைகள் 108 MP , சுமார் 2 மணி நேர MP3 பதிவிறக்கம் செய்ய
நன்றி ஐயா...
https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFOU4tMkZuN2lvekE/view?usp=sharing
Monday, 7 August 2017
தொடக்க வகுப்பு மாணவர்களுக்கான பொது அறிவு தேர்வுத் தாள் 2017
75 எளிய வினாக்களை உள்ளடக்கிய பொது அறிவு வினாத்தாள்.
ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது.
நாள் தோறும் 5 வினாக்களை கூறி குறிப்பேட்டில் எழுத வைத்து , பின்பு தேர்வாக வைத்துள்ளேன் . கூடுதலான பளுவாக இருப்பினும் இதற்க்காக சிறிது நேரம் ஒதுக்கி முயற்சித்ததில் பலன் கிடைத்துள்ளது .
பதிவிறக்கம் செய்ய PDF ...
https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFWUI1RmhoUmdaREk/view?usp=sharing
ப. ரகுபதி இநி ஆ
ஊ.ஒ.ந.நி.பள்ளி திம்மசந்திரம்
வேப்பனபள்ளி ஒன்றியம்
Sunday, 6 August 2017
சுதந்திர தின சிறப்பு கவிதைகள்
நமது மாணவர்களுக்காக
சுதந்திர தின சிறப்பு கவிதைகள் 1
துயரின்றி நாம் வாழ
துன்பம் பல கண்டவர்களுக்கும்
ஒய்யாரமாக நாம் வாழ
உயிர் விட்ட சிங்கங்களுக்கும்
மானத்தோடு நாம் வாழ
செக்கிழுத்த செம்மல்களுக்கும்
சுதந்திரமாக நாம் வாழ
சண்டையிட்ட மறவர்களுக்கும்
சுதந்திர நாளில்
இதய அஞ்சலியை செலுத்துவோம்.
திக்கு கால்
முளைத்து சாதி ஆனதோ
மதத்திற்கு மதம் பிடித்து
மரணம் ஆகின்றதோ?
இதுவா சுதந்திரம்?
சாதியா நம்
ஒருமைப்பாடு?
மதமா நம்
ஒற்றுமை?
உண்மை தான்
நம் பண்பு..!
உழைப்பு தான்
நம் தெம்பு..!
அன்பு ஒன்று தான்
நம் பிணைப்பு..!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!
-------------------------------------------------------------
சுதந்திர தின சிறப்பு கவிதைகள் 2
விடியலை நோக்கி
நள்ளிரவில் சுதந்திரம் பெற்றொம்;
விடியலை நோக்கி செல்கின்றோம்;
வேகம் கொஞ்சம் குறைவுதான்;
தடைகளும் கொஞ்சம் அதிகம்தான்;
ஆனாலும் தளர்ச்சி கண்டதில்லை;
தயங்கி நிற்கவும் போவதில்லை;
பயணம் என்றும் தொடரும்;
விடியலை வென்றும் காண்போம்.
-------------------------------------------------------------
சுதந்திர தின சிறப்பு கவிதைகள் 3
சூரியனுக்கு இரவில் சுதந்திரமில்லை
சந்திரனுக்கு பகலில் சுதந்திரமில்லை
பளிச்சென்ற பகலிலும் பனிவிழும்
இரவிலும் முப்பொழுதிலும் எப்பொழுதிலும்
இந்தியனுக்கு சுதந்திரம் உண்டு !!!
ஆங்கிலேயனிடம் அடிமையானது அறியாமையினால்
வளமையை விட்டது புரியாமையினால்
மிஞ்சியவற்றை அந்நியனுக்கு விற்காமல்
இநதிய வளர்ச்சிக்கு இயற்கையை
அழைத்து மரியாதை செய்து
வளம் பெருக்கி வானுலகம்
போற்ற வல்லரசாக்கி இந்தியாவை
இமயமெனத் தூக்கி நிறுத்துவோம்
பெற்ற சுதந்திரத்தைப் போற்றுவோம்
அனைவருக்கும் பயனுள்ளதாய் மாற்றுவோம் !!!
Independence
Day
India got
independence on 15th of august in 1947, so people of India celebrate this
special day every year as the Independence Day on 15th of august. In the event
celebration, organized in the National Capital, New Delhi, the Prime Minister
of India unfurled the National Flag in the early morning at the Red fort where
millions of people participate in the Independence Day ceremony.
During the
celebration at Red Fort, New Delhi many tasks including March past are
performed by the Indian army and cultural events by the school students are
performed. After the national Flag hosting and national Anthem (JANA GANA MANA)
recitation, the prime minister of India gives his annual speech.
தகவல்கள் சேகரிப்பு
வலைதள பதிவுகள்
Friday, 28 July 2017
டேன்கிராம் Flash Game Free download
நான்காம் வகுப்பு முதல் பருவத்தில் கணிதப் பாடம்
உன்னைச் சுற்றி - பக்கம் 14 ல் டேன்கிராமும் வடிவங்களும் இடம் பெற்றுள்ளது.
டேன்கிராம் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்ட ஒரு சீனப்புதிா். டேன்கிராம் என்பது ஒரு சதுரத்தில் வெட்டி எடுக்கப்பட்ட ஏழு வடிவியல் துண்டுகளைக் கொண்டது. இவற்றை இணைத்து பல வடிவங்களை அமைக்கலாம். பல்வேறு வடிவமைப்புகள், மனித உருவங்கள். பறவைகள் மற்றும் விலங்குகளை உருவாக்கலாம். 6500 வடிவங்களை உருவாக்க முடியும்.
PDF வடிவிலான மென்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய
https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFMFpUVTM0UVJDTmM/view?usp=sharing
டேன்கிராம் விளையாட்டினை கணினியில் விளையாட இணைப்பில் உள்ள பிளாஷ் வடிவிலான அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து அதனை திறந்தால் ஏழு துண்டுகள் கிடைக்கும். அதை அருகில் இருக்கும் படத்தைப்போல் மவுஸால் படத்துண்டுகளை இணைக்க வேண்டும். புதிய உருவம் வேண்டுமனில் படத்தின் மீது கிளிக் செய்ய புதிய உருவம் கிடைக்கும்.
FLASH GAME FREE DOWNLOAD செய்ய.....
உன்னைச் சுற்றி - பக்கம் 14 ல் டேன்கிராமும் வடிவங்களும் இடம் பெற்றுள்ளது.
டேன்கிராம் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்ட ஒரு சீனப்புதிா். டேன்கிராம் என்பது ஒரு சதுரத்தில் வெட்டி எடுக்கப்பட்ட ஏழு வடிவியல் துண்டுகளைக் கொண்டது. இவற்றை இணைத்து பல வடிவங்களை அமைக்கலாம். பல்வேறு வடிவமைப்புகள், மனித உருவங்கள். பறவைகள் மற்றும் விலங்குகளை உருவாக்கலாம். 6500 வடிவங்களை உருவாக்க முடியும்.
PDF வடிவிலான மென்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய
https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFMFpUVTM0UVJDTmM/view?usp=sharing
டேன்கிராம் விளையாட்டினை கணினியில் விளையாட இணைப்பில் உள்ள பிளாஷ் வடிவிலான அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து அதனை திறந்தால் ஏழு துண்டுகள் கிடைக்கும். அதை அருகில் இருக்கும் படத்தைப்போல் மவுஸால் படத்துண்டுகளை இணைக்க வேண்டும். புதிய உருவம் வேண்டுமனில் படத்தின் மீது கிளிக் செய்ய புதிய உருவம் கிடைக்கும்.
FLASH GAME FREE DOWNLOAD செய்ய.....
http://www.4shared.com/file/t2I5aoFmba/TANGRAM.html
Saturday, 22 July 2017
கனவு நிறைவேறியது
இவ்வாறு தான் துவங்கினேன்.....
உதவி வேண்டுகிறேன்..
அன்புள்ள முகநூல் நண்பர்களே,
என்னைப் பற்றி.....
என்ற வாிகளில் ஆரம்பிக்கும் பதிவை 2017 மாா்ச் 5 அன்று முகநூலில் எழுதியிருந்தேன். அந்தப் பதிவின் நோக்கம் ..
SMART BOARD - மாணவா்களின் கற்பித்தலுக்கு பயனுள்ள வகையில் விளங்கும் நவீன சாதனத்தை , எம் பள்ளியில் அமைக்க எண்ணி, அந்தப் பதிவை எழுதினேன். சாியாக நான்கு மாதங்கள் முடிவடைந்த நிலையில் , கல்வி வளா்ச்சி நாளில் (15.07.2017) நிறுவப்பட்டு 19.07.2017 அன்று வேப்பனப்பள்ளி ஒன்றிய உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலா்களால் திறப்பு விழா செய்யப்பட்டது.
இத்திட்டம் நிறைவேற நிதி உதவி செய்தவா்கள் என் அன்பிற்க்கினிய முகநூல் நண்பா்கள் மற்றும் திம்மசந்திரம் பொதுமக்களே ஆவா். வெவ்வேறு மாவட்டங்களில் பணிபுாியும் ஆசிாியா்கள், சமூக ஆா்வலா்கள் , மாணவச்செல்வங்கள் மீது அதீத பற்று கொண்ட மாணவா் நலம் விரும்பிகள் என அனைவரும், என் மீது கொண்ட அளவு கடந்த நம்பிக்கையால், அவா்கள் அளித்த நிதியால், இன்று எட்டாக்கனியானது அரசுப்பள்ளி மாணவா்களுக்கு எட்டியுள்ளது.
சுயநலம் மிகுந்த இந்த உலகில் எவ்வித பிரதிபலனும் பாராமல் இவா்கள் செய்த உதவிக்கு கோடி நன்றிகள் தொிவிப்பினும் ஈடாகாது. போதிய நிதி சேரவில்லை என்றவுடன் உதவியவா்களே மீண்டும் நிதியுதவி செய்ததை எண்ணி, பாராட்டும் வழி தொியாமல் கலங்குகிறேன்.
நன்மை சேர வேண்டி நல்கிய நல்லுள்ளங்களை முகநூல் முகப்பு படங்களுடன் பதிவிட்டுள்ளேன் .....
முகநூல் நண்பா்கள் பங்களிப்பு - 62,500
ஊா்ப்பொதுமக்கள் 5,500
உடன் பணிபுாியும் ஆசிாியை - 1,000
பள்ளி மாணவா்கள் பங்களிப்பு - 300
எனது பங்களிப்பு - 6,100
மொத்தம் --- 75,400
திறப்பு விழா படங்கள்
நல் உள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றிகளையும் பாராட்டுகளையும் சமா்ப்பிக்கிறேன்.......
என்றும் உங்களுடன்...
ப.ரகுபதி இநிஆ,
ஊ.ந.நி.பள்ளி திம்மசந்திரம்,
நாச்சிக்குப்பம் அஞ்சல்,
வேப்பனப்பள்ளி ஒன்றியம்,
கிருஷ்ணகிாி மாவட்டம் 635121
9976668156
Tuesday, 13 June 2017
ஐந்தாம் வகுப்பு - முதல் பருவத்திற்கான வளரறி மதிப்பீடு ( ஆ) வினாத்தாள் புத்தகம்
வளரறி மதிப்பீடு ஆ விற்கான வினாத் தொகுப்புகள் PDF வடிவில் பாடவாரியாக தொகுக்கப்பட்டுள்ளது.
ப.ரகுபதி இநிஆ,
ஊ.ஒ.ந.நி.பள்ளி திம்மசந்திரம்,
வேப்பனப்பள்ளி ஒன்றியம்,
கிருஷ்ணகிரி மா
வகுப்பு - 5
பருவம் - 1
பாடம் - அனைத்தும்
எளிதாக பதிவிறக்கம் செய்து, ஐந்து பாட வினாத் தொகுப்புகளையும் ஒருசேர புத்தகமாக ஒவ்வொரு மாணவருக்கும் அளிப்பதன் மூலம் , பாடத்தின் இறுதியில் மாணவா்கள் எழுதும் சிறு தோ்வுகளை எளிதில் அடையாளம் கண்டு பருவ இறுதியில் cce பதிவேட்டில் பதிய முடியும்.
ஒவ்வொரு வினாத் தொகுப்பின் முன் பக்கத்தில் மதிப்பெண் சுருக்கம் மற்றும் தேவையான அனைத்தும் உள்ளதால் தனியாக FA - B பதிவேடு பராமரிக்கும் சிரமம் தவிர்க்கப்படலாம் .
பிழைகளை பொறுத்தருள்வீராக........
தமிழ்......
ஆங்கிலம்......
கணக்கு......
அறிவியல்.....
சமூக அறிவியல்.....
நன்றி.....
ப.ரகுபதி இநிஆ,
ஊ.ஒ.ந.நி.பள்ளி திம்மசந்திரம்,
வேப்பனப்பள்ளி ஒன்றியம்,
கிருஷ்ணகிரி மா
Saturday, 22 April 2017
CUMULATIVE REGISTER
கல்வியாண்டின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு திரள் பதிவேடு தயாரிக்கும் போது , அவர்களின் புகைப்படத்தை அப்பதிவேட்டில் ஒட்டி வைக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்காக புகைப்படம் கிடைக்கப் பெறுவதில் சற்று சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.
இச்சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு, MS WORD இல் திரள் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள விவரங்களை மாற்றம் செய்து விட்டு , தங்கள் செல்போனில் மாணவர்களை போட்டோ எடுத்து அப்படியே பதிந்து
பிரிண்ட் செய்து பதிவேடாக பராமரிக்கலாம்.
பாமினி எழுத்துகளில் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. LEGAL தாளில் இரண்டு பக்கங்களுக்கு பயன்படுத்தவும்.
நன்றி...
ப. ரகுபதி இநிஆ
ஊ.ஒ.ந.நி.பள்ளி. திம்மசந்திரம்
வேப்பனப்பள்ளி ஒன்றியம்.
MS WORD FILE ...பதிவிறக்கம் செய்ய...
https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFdUgyenVKRVBGZU0/view?usp=sharing
மாதிரி திரள் பதிவேடு .. படங்கள்
Saturday, 11 March 2017
அற்புதக் கலைகள்!!! தற்போது ஆபாசக் கலைகள்???
இன்றைய தலைமுறையில், நாட்டுப்புறக் கலைகளைப் பற்றி பலருக்குத் தெரியவில்லை. பலர் பார்த்ததுமில்லை; கேள்விப்பட்டதுமில்லை.
தமிழகத்தில் இசை, நடனம்,கூத்து போன்ற பல்வேறு கலைகள் செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் என்று இரண்டு பிரிவாகப் பிரிந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் செழித்து வளர்ந்து நிற்கின்றன.
. முன்பு இழிவாக மதிக்கப்பட்ட பரதக்கலை, இப்பொழுது பரதம் கற்பது ஒரு சிறப்புத்தகுதி என்றெண்ணும் அளவுக்கு மிக உயரிய நிலையை அடைந்துள்ளது. நாட்டுப்புறக் கலைகளின் சிறப்பு இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் பரதம்போல இன்னும் உயரிய நிலையை அடையவில்லை. இக்காலத்திலும் பெரிய செல்வர்கள் கூடியுள்ள இடத்தில், நாட்டுப்புற நடனங்கள் ஆடப்படுவதில்லை.
பரதநாட்டியமே முதலிடம் பெறுகிறது. கிராம மக்கள் முன்னிலையில்தான் நாட்டுப்புற நடனங்கள் ஆடப்படுகின்றன; ரசிக்கவும் படுகின்றன.நாட்டுப்புற நடனம் என்பதற்கு 'ஓர் இன மக்களின் நடனம்' என்று பொருள். இது யாரால் உருவாக்கப்பட்டது என்று அறியமுடியவில்லை.
தெருக்கூத்து
தமிழகத்தில், எல்லாக் கிராமங்களிலும் தெருக்கூத்து இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோடைப்பருவத்தில் கோவில் விழாக்களில் தெருக்கூத்து நடைபெறுவதை இன்றியமையாத ஒன்றாக மக்கள் கருதுகின்றனர். இரவு நேரங்களில் கோயிலருகே அமைந்திருக்கும் பெரியவெளி அல்லது நாற்சந்திகளில் கூத்து நடத்தப்படும். தெருக்கூத்தில் ஆடுவதற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முகத்தில் அரிதாரம் பூசிக் கொண்டு தலை, தோள், மார்பு, கைகள் ஆகியவற்றில் மரக்கட்டையால் ஆன அணிகலங்களை அணிந்து கொள்வர். கூத்தைச் சொல்லிக்கொடுக்கும்' வாத்தியார் ' நடனமுறைகள், ராகதாள வகைகளையும் சொல்லிக்கொடுப்பார்.
தெருக்கூத்தில் மிக முக்கியமான ஒருவர் ' கட்டியங்காரன் ' ஆவார். இவருக்கு ' பபூன், விதூஷகன், சூத்திரகாரி 'போன்ற வேறு பெயர்களும் உண்டு. திரைக்குப்பின்னால் இருந்து தன்னைப் பற்றிப் பாடிய பின், திரை விலக்கப்பட்டு,அன்றைய தெருக்கூத்துக் கதையைச் சொல்லுவது, சிறிய பாத்திரங்களைத் தானே ஏற்பது, கூத்தை முடித்து வைப்பது போன்ற பணிகளை இவர் செய்வார்.
தெருக்கூத்து மற்ற நாட்டுப்புறக் கலைகள் போல் பொழுதுபோக்குக்காக ஆடப்படாமல், பக்தியைப் பரப்புவதற்காக ஆடப்படுகின்ற தெய்வீகக் கலையாகும்.
தமிழ் நாட்டின் தலை சிறந்த நாட்டுப்புற நடனங்களுள் கரகாட்டமும் ஓன்று. மண், செம்பு, பித்தளை போன்றவைகளால் வாய்ப்புறம் குவிந்தும், அடிப்புறம் பெருத்தும் காணப்படும் குடம் “கரகம்” எனப்படும். நீர், அரிசி, மணல் போன்றவைகளால் நிரப்பப்பட்டு வாய்ப்புறத்தை மூடி அலங்கரிக்கப்பட்ட குடத்தைத் தலையில் வைத்துக் கைகளால் பிடிக்காமல், நையாண்டி மேள இசைக்கு ஏற்ப ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்படும். தொன்மையான இந்தக் கரகாட்டக் கலையைக் குறித்துப் பல கதைகளும், நம்பிக்கைகளும் நிலவி வருகிறன. இக்கலை மாரியம்மனின் வழிபாட்டுக் கலையாக இருந்து வருகிறது. இத்தகைய தொன்மை மிக்க இக்கலை தற்காலத்தில் பாமர மக்களின் ஆட்டக்கலையாக மாறியது. மாரியம்மன் எனப்படும் பெண் தெய்வத்திற்கான வழிபாட்டில் கரகமெடுத்தல் என்னும் சடங்கு நிகழ்ச்சி தொன்றுதொட்டு நிலவி வருகிறது. தூய்மையான மண் கலத்தில் மஞ்சள் நீர், பால், அரிசி போன்ற பொருள்களை நிரப்பி வேப்பிலை, மாவிலை முதலிய தழைகளைச் செருகி அதன் வாய்ப் பகுதியில் ஒரு தேங்காயைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்து இக்குடத்தைத் தலையில் சுமந்து சென்று அம்மனை வழிபடுவர். கரகக் குடத்தில் நிரப்பப்படும் பொருள்கள் அவரவர்களின் வேண்டுதலையொட்டி அமையும். புனிதப் பொருள்கள் நிரப்புதல் என்ற செயலால் அம்மனே குடத்தில் வந்து பொருந்தி இருப்பதாகப் பாவித்துக் கொண்டு, அதனைத் தலையில் சுமந்து சென்று வழிபடுதல் என்னும் தெய்வச் சடங்கே கரகமெடுத்தல் என்றழைக்கப்படுகிறது. பூங்கரகம் எடுப்பதாக வேண்டிக் கொண்டவர்கள் புதுமட் குடத்தின் மேல் சுண்ணாம்பு நீராலும், செம்மண்ணாலும் அழகான கோலங்கள் வரைந்து அதில் மஞ்சள் நீர் ஊற்றிப் பானையைச் சுற்றிப் பல நிறப் பூக்களால் அலங்கரித்து, அக்குடத்தைத் தலையில் சுமந்து சென்று அம்மனை வழிபடுதல் பூங்கரகம் எடுத்தல் எனப்படும
சரி மேற்சொன்னவை அனைத்தும் மனதிற்கினியதாகும்.
தற்காலத்தில் இக்கலைகளின் நிலையைப் பற்றி பார்ப்போம்
- சினிமா - தான் இதற்கு காரணமா?
குற்றங்களையும், ஆபாசத்தையும் அனைவருக்கும் எளிதில் கற்றுக் கொடுக்கும் அற்புதமான கலை???
நவீன காலத்தில் தவிர்க்க வேண்டியவற்றை தவிர்க்காமல் தம் வருவாயை பெருக்கி கொள்ள, குழந்தைகளை தாமும் அவ்வாறே செய்யத்தூண்டும், திரைப்படக்காட்சிகள், தொலைக்காட்சி தொடர்களில் பயன்படுத்தப்படும் வசனங்கள், ஆபாசங்கள் அருவருப்பின் உச்சம் என்றே கூறலாம்.
தற்போது இந்த இழிவான நிலையால் தமது கரகாட்ட கலையை காப்பாற்ற கரகாட்ட கலைஞர்களும் தங்களால் இயன்ற அளவு திறமையை???? வெளிப்படுத்தி வருவது இந்நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு அப்பட்டமாக விளங்கும்.
தெருக்கூத்து -
இரவெல்லாம் கண்விழித்து பக்திக் கதைகளை ரசிக்கும் கூத்து
அழிவின் எல்லையில் தள்ளப்பட்டுள்ளது. இக்கலையிலும் பபூன் என்பவரின் நகைச்சுவையில் ஆபாச வார்த்தைகள் கொப்பளிக்கிறது. இடையிடையே வேடிக்கை என்ற பெயரில் செய்யும் செயல்கள் முகம் சுளிக்க வைக்கிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றாக அமர்ந்து ரசிக்கும் இக்கலையிலும் ஆபாசங்கள் விரவிக் கிடக்கிறது.
இவை அனைத்தும் எதனை உணர்த்துகின்றது????
நமக்கு எதனை கற்றுத் தரப்போகிறது.????
வருங்கால சமுதாயத்தை பண்பற்றவர்களாக, பாசமற்றவர்களாக,
ஒழுக்கமற்றவர்களாக
இழிவான கலாச்சாரத்திற்கு இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை...
இந்த நிலை மாற வேண்டும்.....
ரகுபதி இநிஆ
திம்மசந்திரம்
வேப்பனப்பள்ளி
Subscribe to:
Comments (Atom)
































