இவ்வாறு தான் துவங்கினேன்.....
உதவி வேண்டுகிறேன்..
அன்புள்ள முகநூல் நண்பர்களே,
என்னைப் பற்றி.....
என்ற வாிகளில் ஆரம்பிக்கும் பதிவை 2017 மாா்ச் 5 அன்று முகநூலில் எழுதியிருந்தேன். அந்தப் பதிவின் நோக்கம் ..
SMART BOARD - மாணவா்களின் கற்பித்தலுக்கு பயனுள்ள வகையில் விளங்கும் நவீன சாதனத்தை , எம் பள்ளியில் அமைக்க எண்ணி, அந்தப் பதிவை எழுதினேன். சாியாக நான்கு மாதங்கள் முடிவடைந்த நிலையில் , கல்வி வளா்ச்சி நாளில் (15.07.2017) நிறுவப்பட்டு 19.07.2017 அன்று வேப்பனப்பள்ளி ஒன்றிய உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலா்களால் திறப்பு விழா செய்யப்பட்டது.
இத்திட்டம் நிறைவேற நிதி உதவி செய்தவா்கள் என் அன்பிற்க்கினிய முகநூல் நண்பா்கள் மற்றும் திம்மசந்திரம் பொதுமக்களே ஆவா். வெவ்வேறு மாவட்டங்களில் பணிபுாியும் ஆசிாியா்கள், சமூக ஆா்வலா்கள் , மாணவச்செல்வங்கள் மீது அதீத பற்று கொண்ட மாணவா் நலம் விரும்பிகள் என அனைவரும், என் மீது கொண்ட அளவு கடந்த நம்பிக்கையால், அவா்கள் அளித்த நிதியால், இன்று எட்டாக்கனியானது அரசுப்பள்ளி மாணவா்களுக்கு எட்டியுள்ளது.
சுயநலம் மிகுந்த இந்த உலகில் எவ்வித பிரதிபலனும் பாராமல் இவா்கள் செய்த உதவிக்கு கோடி நன்றிகள் தொிவிப்பினும் ஈடாகாது. போதிய நிதி சேரவில்லை என்றவுடன் உதவியவா்களே மீண்டும் நிதியுதவி செய்ததை எண்ணி, பாராட்டும் வழி தொியாமல் கலங்குகிறேன்.
நன்மை சேர வேண்டி நல்கிய நல்லுள்ளங்களை முகநூல் முகப்பு படங்களுடன் பதிவிட்டுள்ளேன் .....
முகநூல் நண்பா்கள் பங்களிப்பு - 62,500
ஊா்ப்பொதுமக்கள் 5,500
உடன் பணிபுாியும் ஆசிாியை - 1,000
பள்ளி மாணவா்கள் பங்களிப்பு - 300
எனது பங்களிப்பு - 6,100
மொத்தம் --- 75,400
திறப்பு விழா படங்கள்
நல் உள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றிகளையும் பாராட்டுகளையும் சமா்ப்பிக்கிறேன்.......
என்றும் உங்களுடன்...
ப.ரகுபதி இநிஆ,
ஊ.ந.நி.பள்ளி திம்மசந்திரம்,
நாச்சிக்குப்பம் அஞ்சல்,
வேப்பனப்பள்ளி ஒன்றியம்,
கிருஷ்ணகிாி மாவட்டம் 635121
9976668156
























சிறப்பான பணி
ReplyDeleteமேலும்
சிறந்திட வாழ்த்துகள் ஐயா
சிறப்பான பணி
ReplyDeleteமேலும்
சிறந்திட வாழ்த்துகள் ஐயா
உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐
ReplyDelete