Wednesday, 9 August 2017

இன்று ஒரு தகவல் 30 - MP3 தென்கச்சி கோ. சுவாமிநாதன்




மாியாதைக்குாிய திரு. தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவாா். இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார்.அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் இந்த நாள் இனிய நாள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தாா்.

    அவாின் இக்கதைகள் மாணவர்களுக்கு நல்ல சிந்தனைகளை உருவாக்கிட உதவியாக

30 சிறு கதைகள் 108 MP ,  சுமார் 2 மணி நேர MP3 பதிவிறக்கம் செய்ய

நன்றி ஐயா...


https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFOU4tMkZuN2lvekE/view?usp=sharing




Monday, 7 August 2017

தொடக்க வகுப்பு மாணவர்களுக்கான பொது அறிவு தேர்வுத் தாள் 2017




                                            



  75   எளிய வினாக்களை உள்ளடக்கிய பொது அறிவு வினாத்தாள். 

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது.


நாள் தோறும்  5 வினாக்களை  கூறி குறிப்பேட்டில் எழுத வைத்து , பின்பு தேர்வாக வைத்துள்ளேன் . கூடுதலான பளுவாக இருப்பினும் இதற்க்காக சிறிது நேரம் ஒதுக்கி முயற்சித்ததில்  பலன் கிடைத்துள்ளது .


பதிவிறக்கம் செய்ய   PDF ...

https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFWUI1RmhoUmdaREk/view?usp=sharing


ப. ரகுபதி  இநி ஆ
ஊ.ஒ.ந.நி.பள்ளி  திம்மசந்திரம்
வேப்பனபள்ளி ஒன்றியம்


Sunday, 6 August 2017

சுதந்திர தின சிறப்பு கவிதைகள்


நமது மாணவர்களுக்காக



சுதந்திர தின சிறப்பு கவிதைகள்    1

துயரின்றி நாம் வாழ
துன்பம் பல கண்டவர்களுக்கும்
ஒய்யாரமாக நாம் வாழ
உயிர் விட்ட சிங்கங்களுக்கும்
மானத்தோடு நாம் வாழ
செக்கிழுத்த செம்மல்களுக்கும்
சுதந்திரமாக நாம் வாழ
சண்டையிட்ட மறவர்களுக்கும்
சுதந்திர நாளில்
இதய அஞ்சலியை செலுத்துவோம்.
திக்கு கால்
முளைத்து சாதி ஆனதோ
மதத்திற்கு மதம் பிடித்து
மரணம் ஆகின்றதோ?
இதுவா சுதந்திரம்?

சாதியா நம்
ஒருமைப்பாடு?
மதமா நம்
ஒற்றுமை?

உண்மை தான்
நம் பண்பு..!
உழைப்பு தான்
நம் தெம்பு..!
அன்பு ஒன்று தான்
நம் பிணைப்பு..!

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

-------------------------------------------------------------


சுதந்திர தின சிறப்பு கவிதைகள்  2

விடியலை நோக்கி

நள்ளிரவில் சுதந்திரம் பெற்றொம்;
விடியலை நோக்கி செல்கின்றோம்;
வேகம் கொஞ்சம் குறைவுதான்;
தடைகளும் கொஞ்சம் அதிகம்தான்;
ஆனாலும் தளர்ச்சி கண்டதில்லை;
தயங்கி நிற்கவும் போவதில்லை;
பயணம் என்றும் தொடரும்;
விடியலை வென்றும் காண்போம்.
-------------------------------------------------------------

சுதந்திர தின சிறப்பு கவிதைகள்   3


சூரியனுக்கு இரவில் சுதந்திரமில்லை
சந்திரனுக்கு பகலில் சுதந்திரமில்லை
பளிச்சென்ற பகலிலும் பனிவிழும்
இரவிலும் முப்பொழுதிலும் எப்பொழுதிலும்
இந்தியனுக்கு சுதந்திரம் உண்டு !!!
ஆங்கிலேயனிடம் அடிமையானது அறியாமையினால்
வளமையை விட்டது புரியாமையினால்
மிஞ்சியவற்றை அந்நியனுக்கு விற்காமல்
இநதிய வளர்ச்சிக்கு இயற்கையை
அழைத்து மரியாதை செய்து
வளம் பெருக்கி வானுலகம்
போற்ற வல்லரசாக்கி இந்தியாவை
இமயமெனத் தூக்கி நிறுத்துவோம்
பெற்ற சுதந்திரத்தைப் போற்றுவோம்
அனைவருக்கும் பயனுள்ளதாய் மாற்றுவோம் !!!



Independence Day

India got independence on 15th of august in 1947, so people of India celebrate this special day every year as the Independence Day on 15th of august. In the event celebration, organized in the National Capital, New Delhi, the Prime Minister of India unfurled the National Flag in the early morning at the Red fort where millions of people participate in the Independence Day ceremony.

During the celebration at Red Fort, New Delhi many tasks including March past are performed by the Indian army and cultural events by the school students are performed. After the national Flag hosting and national Anthem (JANA GANA MANA) recitation, the prime minister of India gives his annual speech.


தகவல்கள் சேகரிப்பு 

வலைதள பதிவுகள்