Thursday, 26 January 2017

DYNAMIC RURAL DEVELOPMENT TRUST - NAADUVANAPALLI, KRISHNAGIRI

அனைவருக்கும் வணக்கம்
🙏🏻🙏🏻


DYNAMIC RURAL DEVELOPMENT TRUST

நாடுவனப்பள்ளி கிராமம்,
வேப்பனப்பள்ளி அஞ்சல்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.

    கிராமப்புற மாணவர்களின் கல்வி நலனுக்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும்
10/12/2015 அன்று நிறுவப்பட்டது.
அறக்கட்டளையின் சார்பில் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் பொது இடங்களை தூய்மைப்படுத்துதல், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் அளித்தல் முதலிய நற்செயல்கள் செய்து வருகின்றனர்.

  இன்று 26/01/2017 ல் DRD அறக்கட்டளையின் அலுவலக திறப்பு விழா நாடுவனப்பள்ளி கிராமத்தில் நடைபெற்றது.
வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர்
திருமதி. R.  அமுதா அவர்களால்
 திறந்து வைக்கப்பட்டது.
வேப்பனப்பள்ளி,  மக்கள் கணினி மைய நிர்வாகி
 திரு. சிராஜ் அவர்கள்,  வேப்பனப்பள்ளி பரோடா வங்கி அதிகாரி உடன் பங்கேற்றனர்.

அறக்கட்டளையை ஊக்குவிக்கவும், வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் துணை காவல் ஆய்வாளர் அவர்கள் மனமுவந்து ரூபாய் 5000 நிதியுதவி அளித்தது மற்றவர்களுக்கும் தூண்டுதலாக அமைந்தது.

அறக்கட்டளை நிறுவப்பட்ட நாள் முதல் இதுவரை....

வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட...

நாடுவனப்பள்ளி,
நந்தகொண்டபள்ளி,
தளிகோட்டூர்,
திம்மசந்திரம்,
தாசிரிபள்ளி,
மாதேப்பள்ளி,
கத்திரிபள்ளி,
இடிப்பள்ளி,
எட்டிப்பள்ளி,
கங்கமடுகு,
சிங்கிரிபள்ளி
முதலிய பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு

800 நோட்டுகள்,
300 பென்சில்கள்,
500 பேனாக்கள்,
500 ஷார்ப்னர்கள்,
500 அழிப்பான்கள்  ஆகியவற்றை இலவசமாக வழங்கியுள்ளனர்.

ஊ. ஒ. தொ . பள்ளி, கொத்தகிருஷ்ணபள்ளி தலைமையாசிரியர்
திரு. தாஹிர் பாஷா அவர்களின் வேண்டுகோளை ஏற்று, பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தியது, அறக்கட்டளையில் இணைந்துள்ள அனைத்து இளைஞர்களின் சமூக அக்கறையையும்  வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவர்களுக்கு பக்க பலமாக  ஊர் பொதுமக்களும் கை கோர்த்து ஆதரவளித்து வருகின்றனர்

 அறக்கட்டளையின் உறுப்பினர்கள் முப்பது பேரில் பெரும்பாலானவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் உயர்கல்வி நிறுவனங்களில் பயின்றவர்களோ, நிறுவனங்களில் பணியாற்றவோ இல்லை. இருப்பினும் சேவை நோக்கில் இளைஞர்கள் ஒன்றிணைந்து  மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குவது நெகிழ்ச்சிக்குரியதாகும்.

தலைவர் : திரு. பாக்கியராஜ்
செயலாளர் : திரு. சுதா


இவர்களின் பெரும் முயற்சிகளில், சிறிதளவேனும் பங்குபெறும் ஆவலில்... நான்

ப. ரகுபதி இநிஆ
திம்மசந்திரம்
வேப்பனப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம்
💐💐💐💐💐💐


1 comment:

  1. சிறப்பு. ஆக்கமும் ஊக்கமும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete