மெல்லக் கற்கும் மாணவர்கள் மற்றும் முதல் வகுப்பு மாணவர்களின் எழுதுதல் திறனை வளர்க்க இப்பயிற்சித்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிற்சித்தாளில் ஒரே வார்த்தை மூன்று முறை அச்சிடப்பட்டு,அதைத்தொடர்ந்து இரண்டு காலி கட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் வார்த்தை தடிமனாகவும் அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு வார்த்தைகள் மெலிதாகவும் அச்சிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தடித்த வார்த்தைகளை வாசித்த பின் அதனை தொடர்ந்து வரும் மெல்லிய வார்த்தைகளின் மீது எழுதிப் பழக வேண்டும். அதன்பின் வரும் காலி கட்டங்களில் அவ்வார்த்தையை தாமாகவே உச்சரித்துக்கொண்டே எழுத வேண்டும். ஒவ்வொரு தாளிலும் பயிற்சி மேற்கொண்ட பின் அத்தாளில் உள்ள வார்த்தைகளை, ஆசிரியர் சொல்லக்கேட்டு மாணவர்கள் பார்க்காமல் எழுதும் போது அவர்களின் எழுதுதல் திறன் வலுப்பெறுகிறது.
பதிவிறக்கம் செய்ய.........
PDF FILE .....
https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFRF81WS1sWWlJTzg/view?usp=sharing
WORD FILE.....
(பாமினி எழுத்துரு வடிவில்)
https://drive.google.com/file/d/0Byh7wmEb63lFVk41NmhPWk50Vjg/view?usp=sharing
No comments:
Post a Comment