இன்றைய தலைமுறையில், நாட்டுப்புறக் கலைகளைப் பற்றி பலருக்குத் தெரியவில்லை. பலர் பார்த்ததுமில்லை; கேள்விப்பட்டதுமில்லை.
தமிழகத்தில் இசை, நடனம்,கூத்து போன்ற பல்வேறு கலைகள் செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் என்று இரண்டு பிரிவாகப் பிரிந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் செழித்து வளர்ந்து நிற்கின்றன.
. முன்பு இழிவாக மதிக்கப்பட்ட பரதக்கலை, இப்பொழுது பரதம் கற்பது ஒரு சிறப்புத்தகுதி என்றெண்ணும் அளவுக்கு மிக உயரிய நிலையை அடைந்துள்ளது. நாட்டுப்புறக் கலைகளின் சிறப்பு இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் பரதம்போல இன்னும் உயரிய நிலையை அடையவில்லை. இக்காலத்திலும் பெரிய செல்வர்கள் கூடியுள்ள இடத்தில், நாட்டுப்புற நடனங்கள் ஆடப்படுவதில்லை.
பரதநாட்டியமே முதலிடம் பெறுகிறது. கிராம மக்கள் முன்னிலையில்தான் நாட்டுப்புற நடனங்கள் ஆடப்படுகின்றன; ரசிக்கவும் படுகின்றன.நாட்டுப்புற நடனம் என்பதற்கு 'ஓர் இன மக்களின் நடனம்' என்று பொருள். இது யாரால் உருவாக்கப்பட்டது என்று அறியமுடியவில்லை.
தெருக்கூத்து
தமிழகத்தில், எல்லாக் கிராமங்களிலும் தெருக்கூத்து இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோடைப்பருவத்தில் கோவில் விழாக்களில் தெருக்கூத்து நடைபெறுவதை இன்றியமையாத ஒன்றாக மக்கள் கருதுகின்றனர். இரவு நேரங்களில் கோயிலருகே அமைந்திருக்கும் பெரியவெளி அல்லது நாற்சந்திகளில் கூத்து நடத்தப்படும். தெருக்கூத்தில் ஆடுவதற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முகத்தில் அரிதாரம் பூசிக் கொண்டு தலை, தோள், மார்பு, கைகள் ஆகியவற்றில் மரக்கட்டையால் ஆன அணிகலங்களை அணிந்து கொள்வர். கூத்தைச் சொல்லிக்கொடுக்கும்' வாத்தியார் ' நடனமுறைகள், ராகதாள வகைகளையும் சொல்லிக்கொடுப்பார்.
தெருக்கூத்தில் மிக முக்கியமான ஒருவர் ' கட்டியங்காரன் ' ஆவார். இவருக்கு ' பபூன், விதூஷகன், சூத்திரகாரி 'போன்ற வேறு பெயர்களும் உண்டு. திரைக்குப்பின்னால் இருந்து தன்னைப் பற்றிப் பாடிய பின், திரை விலக்கப்பட்டு,அன்றைய தெருக்கூத்துக் கதையைச் சொல்லுவது, சிறிய பாத்திரங்களைத் தானே ஏற்பது, கூத்தை முடித்து வைப்பது போன்ற பணிகளை இவர் செய்வார்.
தெருக்கூத்து மற்ற நாட்டுப்புறக் கலைகள் போல் பொழுதுபோக்குக்காக ஆடப்படாமல், பக்தியைப் பரப்புவதற்காக ஆடப்படுகின்ற தெய்வீகக் கலையாகும்.
தமிழ் நாட்டின் தலை சிறந்த நாட்டுப்புற நடனங்களுள் கரகாட்டமும் ஓன்று. மண், செம்பு, பித்தளை போன்றவைகளால் வாய்ப்புறம் குவிந்தும், அடிப்புறம் பெருத்தும் காணப்படும் குடம் “கரகம்” எனப்படும். நீர், அரிசி, மணல் போன்றவைகளால் நிரப்பப்பட்டு வாய்ப்புறத்தை மூடி அலங்கரிக்கப்பட்ட குடத்தைத் தலையில் வைத்துக் கைகளால் பிடிக்காமல், நையாண்டி மேள இசைக்கு ஏற்ப ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்படும். தொன்மையான இந்தக் கரகாட்டக் கலையைக் குறித்துப் பல கதைகளும், நம்பிக்கைகளும் நிலவி வருகிறன. இக்கலை மாரியம்மனின் வழிபாட்டுக் கலையாக இருந்து வருகிறது. இத்தகைய தொன்மை மிக்க இக்கலை தற்காலத்தில் பாமர மக்களின் ஆட்டக்கலையாக மாறியது. மாரியம்மன் எனப்படும் பெண் தெய்வத்திற்கான வழிபாட்டில் கரகமெடுத்தல் என்னும் சடங்கு நிகழ்ச்சி தொன்றுதொட்டு நிலவி வருகிறது. தூய்மையான மண் கலத்தில் மஞ்சள் நீர், பால், அரிசி போன்ற பொருள்களை நிரப்பி வேப்பிலை, மாவிலை முதலிய தழைகளைச் செருகி அதன் வாய்ப் பகுதியில் ஒரு தேங்காயைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்து இக்குடத்தைத் தலையில் சுமந்து சென்று அம்மனை வழிபடுவர். கரகக் குடத்தில் நிரப்பப்படும் பொருள்கள் அவரவர்களின் வேண்டுதலையொட்டி அமையும். புனிதப் பொருள்கள் நிரப்புதல் என்ற செயலால் அம்மனே குடத்தில் வந்து பொருந்தி இருப்பதாகப் பாவித்துக் கொண்டு, அதனைத் தலையில் சுமந்து சென்று வழிபடுதல் என்னும் தெய்வச் சடங்கே கரகமெடுத்தல் என்றழைக்கப்படுகிறது. பூங்கரகம் எடுப்பதாக வேண்டிக் கொண்டவர்கள் புதுமட் குடத்தின் மேல் சுண்ணாம்பு நீராலும், செம்மண்ணாலும் அழகான கோலங்கள் வரைந்து அதில் மஞ்சள் நீர் ஊற்றிப் பானையைச் சுற்றிப் பல நிறப் பூக்களால் அலங்கரித்து, அக்குடத்தைத் தலையில் சுமந்து சென்று அம்மனை வழிபடுதல் பூங்கரகம் எடுத்தல் எனப்படும
சரி மேற்சொன்னவை அனைத்தும் மனதிற்கினியதாகும்.
தற்காலத்தில் இக்கலைகளின் நிலையைப் பற்றி பார்ப்போம்
- சினிமா - தான் இதற்கு காரணமா?
குற்றங்களையும், ஆபாசத்தையும் அனைவருக்கும் எளிதில் கற்றுக் கொடுக்கும் அற்புதமான கலை???
நவீன காலத்தில் தவிர்க்க வேண்டியவற்றை தவிர்க்காமல் தம் வருவாயை பெருக்கி கொள்ள, குழந்தைகளை தாமும் அவ்வாறே செய்யத்தூண்டும், திரைப்படக்காட்சிகள், தொலைக்காட்சி தொடர்களில் பயன்படுத்தப்படும் வசனங்கள், ஆபாசங்கள் அருவருப்பின் உச்சம் என்றே கூறலாம்.
தற்போது இந்த இழிவான நிலையால் தமது கரகாட்ட கலையை காப்பாற்ற கரகாட்ட கலைஞர்களும் தங்களால் இயன்ற அளவு திறமையை???? வெளிப்படுத்தி வருவது இந்நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு அப்பட்டமாக விளங்கும்.
தெருக்கூத்து -
இரவெல்லாம் கண்விழித்து பக்திக் கதைகளை ரசிக்கும் கூத்து
அழிவின் எல்லையில் தள்ளப்பட்டுள்ளது. இக்கலையிலும் பபூன் என்பவரின் நகைச்சுவையில் ஆபாச வார்த்தைகள் கொப்பளிக்கிறது. இடையிடையே வேடிக்கை என்ற பெயரில் செய்யும் செயல்கள் முகம் சுளிக்க வைக்கிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றாக அமர்ந்து ரசிக்கும் இக்கலையிலும் ஆபாசங்கள் விரவிக் கிடக்கிறது.
இவை அனைத்தும் எதனை உணர்த்துகின்றது????
நமக்கு எதனை கற்றுத் தரப்போகிறது.????
வருங்கால சமுதாயத்தை பண்பற்றவர்களாக, பாசமற்றவர்களாக,
ஒழுக்கமற்றவர்களாக
இழிவான கலாச்சாரத்திற்கு இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை...
இந்த நிலை மாற வேண்டும்.....
ரகுபதி இநிஆ
திம்மசந்திரம்
வேப்பனப்பள்ளி
